ETV Bharat / state

பணி வழங்கக்கோரி சர்க்கரை ஆலை தற்காலிக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்! - வடபுதுப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

வேலூர்: ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த தற்காலி ஊழியர்கள் பணி நீக்கம்  செய்யப்பட்டதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

sugar mill
author img

By

Published : Nov 17, 2019, 6:17 AM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வடபுதுப்பட்டு கிராமத்தில் 1961ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அவர்களால் தொடங்கப்பட்ட ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு ஆரம்ப காலத்தில் சுமார் 1,500 ஊழியர்கள் பணிபுரிந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து 250 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் பருவகாலத்தில் அதிகளவு கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டதால், கரும்புகளை அரவைச் செய்ய போதியளவு ஊழியர்கள் பற்றாக்குறை நிலவியது. இதை சமாளிக்கும் விதமாக ஆலை நிர்வாகம் தற்காலிக ஊழியர்களை பணியமர்த்தியது. தொடர்ந்து ஆலைக்கு கரும்பு வந்ததால் தற்காலிக ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படாமல், ஆலை நிர்வாகம் தொடர்ந்து பணி வழங்கி வந்தது. தற்போது கரும்பு வரத்து குறைந்துள்ளதால், ஊதிய செலவைக் குறைக்கும் வகையில் பருவக்காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்

இது தற்காலிக ஊழியர்களுக்கு பேரிடியாக இருந்தது. இதைக் கண்டிக்கும் வகையிலும், மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து நேற்றுமுதல் அனைவரும் ஆலை வளாகத்திலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆலை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதற்கு ஆலை நிர்வாகத்தினரே காரணம் என கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: உலக தரம், சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு ஊர்வலம்

Intro:ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை இல்லை இல்லை எனக் கூறியதாலும் பருவகால தற்காலிக பணியாளர்களை வேலைக்கு வரவேண்டாம் என்று கூறியதால் சர்க்கரை ஆலை உள்ளே 250 தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Body:

வேலூர் மாவட்டம்

ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தில் 1961 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜர் அவர்களால் துவங்கப்பட்ட ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது. இங்கு ஆரம்ப காலத்தில் சுமார் 1,500 தொழிலாளர்கள் வேலை செய்த நிலையில் இன்று படிப்படியாக குறைந்து 250 தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அரவை கரும்பு வருவது குறைவாக உள்ள காரணத்தால் ஆலையை இயக்க முடியாது. கரும்பு ஆலய இயக்க வேண்டுமென்றால் ஒரு லட்சம் டன் கரும்பு வரவை இருக்கவேண்டும் ஆனால் இப்போது 35 ஆயிரம் டன் கரும்பு மட்டுமே உள்ளது எனவே ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வருகின்ற 35 ஆயிரம் டன் கரும்பு களையும் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறி உள்ளனர். அதுமடடுமல்லாமல் பருவகாலம் நாளில் பணியமர்தப்பட்ட தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளனர்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் 5 கரும்பு சர்க்கரை ஆலைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இதனால் பெறும் அதிர்ச்சியடைந்த ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணி புரிந்து வந்த 250 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்து பசி பட்டினியால் 250 குடும்பமும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இன்று மாலை முதல் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் காமராஜர் அவர்களால் மாநிலத்திலேயே முதல் கரும்பு சர்க்கரை ஆலை செயல்படுத்தியதை இன்று மூடும் நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நிர்வாகிகள் மட்டுமே. இதனால் விவசாயிகளின் உபரி வேலை ஆட்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது. அதையே நம்பி இருக்கும் 250 தொழிலாளர்கள் குடும்ப வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கிறது. எனவே மீண்டும் எங்கள் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கும் மேலும் தற்காலிக பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என உத்தரவு வரும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்....
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.